5.மெய்ப்பொருள் நாயனார்

அமைவிடம் : temple icon.meiporular
வரிசை எண் : 5
இறைவன்: வீரட்டேஸ்வரர்
இறைவி : சிவானந்தவல்லி, பெரியநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : தென்பெண்ணை
குலம் : அரசர்
அவதாரத் தலம் : திருக்கோவிலூர்
முக்தி தலம் : திருக்கோவிலூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : கார்த்திகை உத்திரம்
வரலாறு : மலாடர் மரபிலே திருக்கோயிலூரில் அவதாரம் செய்தவர். சிவ வேடத்திற்கு மதிப்பளித்தவர். இவரோடு முத்தநாதன் என்பவன் மாறுபாடு கொண்டு பலமுறை நாயனாரோடு போர் செய்து தோற்றவன்.நாயனாரின் நாட்டை எவ்விதமாயினும் கவர எண்ணி அவரோடு போர் புரிந்தான். போர் செய்து அவரை வெல்ல் இயலாது என்பதை அறிந்த முத்தநாதன் வஞ்சகமாக அவரை வீழ்த்த எண்ணி சிவ வேடப் பொலிவிற்கு அவர் காட்டும் பக்தியினை அறிந்து சூழ்ச்சி செய்கிறான். ஒருநாள் மெய்ப்பொருளாரின் அரண்மனைக்குச் சிவ வேடம் தாங்கிச் சென்று தான் ஒரு ஆகம நூல் கொண்டு வந்திருப்பதாகவும் அதனை நாயனாருக்கு உபதேசம் செய்ய விரும்புதாகவும் கூற நாயனார் மிகவும் மகிழ்ந்து முத்தநாதனை இருகையில் இருத்தி தான் கீழிருந்து உபதேசத்தினை அருளுமாறு வேண்ட அப்போது புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த வடிவாளினை எடுத்து தான் கருதியதை முடித்தான். தான் உயிர் துறக்கும் வேளையிலும் முத்தநாதனுக்கு யாதொரு தீங்கும் செய்யலாகாது என்று தன் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டு அவரைப் பத்திரமாக எல்லையில் கொண்டு விட்டு வருமாறு என்று சொல்லி அவ்வாறு முடிக்கப்பட்ட அந்த விபரத்தைக் கேட்ட பிறகே சிவபதம் அடைந்தார்.
முகவரி : அருள்மிகு. வீரட்டேஸ்வரர் கோயில்திருக்கோயிலூர் - 605757
விழுப்புரம் மாவட்டம் கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04153-224036, அலைபேசி : 9344879787

இருப்பிட வரைபடம்


அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து 
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி 
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் 
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்

    	           - பெரிய புராணம் 468
பாடல் கேளுங்கள்
 அரசியல்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க